சினிமாவை விட்டு ஓய்வு.. ராஷ்மிகா எமோஷனல்!! காரணம் இது தானா
ராஷ்மிகா மந்தனா
உலகளவில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்திய சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக புஷ்பா 2 வலம் வருகிறது. அடுத்து ராஷ்மிகா Chhaava என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறார்.
அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில், காலில் அடிபட்டு இருக்கும் நிலையில் கூட நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொண்டு பலரின் பாராட்டை பெற்றார்.
காரணம் இது தானா
இந்நிலையில், சினிமாவை விட்டு விலகுவது குறித்து ராஷ்மிகா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "இது போன்ற ஒரு ரோல் கொடுத்த மூவி டீமுக்கு மிகவும் நன்றி. மகாராணி யேசுபாயாக நடிப்பது சினிமா வாழ்க்கையில் நான் செய்த மாபெரும் பாக்கியம். இந்த படத்தோடு நான் ஓய்வு பெற்றாலும் அது எனக்கு சந்தோஷம் தான்" என்று கூறியுள்ளார்.