சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகா.. திடீரென அப்படியொரு விஷயத்தை செய்த நடிகை
Samantha
Rashmika Mandanna
By Karthick Raja
ராஷ்மிகா மந்தனா
சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கும் மேல் கமிட் செய்துள்ளாராம்.
தென்னிந்தியாவில் நடித்த படங்களில் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த ராஷ்மிகா, பாலிவுட்டில் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சில நாட்களுக்கு செய்திகள் வெளிவந்தன.

சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகா
இந்நிலையில், தற்போது மீண்டும் தனது சம்பளத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா உயர்த்தியுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளாராம் ராஷ்மிகா.

கடந்த பல வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் சமந்தாவே கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி தான் சம்பமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது