கீழே விழுந்த நடிகை ராஷ்மிகா மந்தனா! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சியூட்டும் தகவல்
பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் இவரும் இடம்பிடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலரான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த காக்டெய்ல் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் Mysaa மற்றும் ரணபலி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு படத்திற்காக ராஷ்மிகா நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்துள்ளார். அப்போது, அவரது தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தசைநார் கிழிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் 6 வார காலத்திற்கு ஓய்வெடுத்து சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

அதனால் ராஷ்மிகா நடிக்க வேண்டிய அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.