ராஷ்மிகாவின் அந்த கருத்தால் பெரும் கோபத்தில் மக்கள்.. பரபரப்பு விஷயம்!

Rashmika Mandanna Actress Kuberaa
By Bhavya Jul 09, 2025 08:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இருப்பினும், படத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது.

ராஷ்மிகா கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார்.

ராஷ்மிகாவின் அந்த கருத்தால் பெரும் கோபத்தில் மக்கள்.. பரபரப்பு விஷயம்! | Rashmika Talk About Her Community Become Issue

பரபரப்பு விஷயம்! 

இந்நிலையில், ராஷ்மிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் அவருக்கு எதிராகவே மாறியுள்ளது.

அதில், " எனக்கு முன் கொடவா சமூகத்தைச் சேர்ந்த யாரும் திரைப்படத் துறையில் நுழைந்ததில்லை. நான் தான் முதல் ஆள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகாவுக்கு முன் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக இருக்கும் பிரேமா, குல்ஷன் தேவையா, நிதி சுப்பையா உள்ளிட்ட சிலர் கொடவா சமூகத்தை சார்ந்தவர்கள். இதனால் ராஷ்மிகாவின் கருத்து கொடவா சமூகத்தை சேர்ந்தவர்களை கோபப்படுத்தியுள்ளது.    

ராஷ்மிகாவின் அந்த கருத்தால் பெரும் கோபத்தில் மக்கள்.. பரபரப்பு விஷயம்! | Rashmika Talk About Her Community Become Issue