86 வயதில் மரணமடைந்தார் தொழிலதிபர் ரத்தன் டாடா.. அதிர்ச்சியில் மக்கள்
Death
Ratan Tata
By Kathick
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 86. இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரம் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு அவர் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.