Ratan Tata : 3500 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு!! ஊரே போற்றும் ரத்தன் டாடா..
ரத்தன் டாடா
நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில் நேற்று இரவும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மண்ணைவிட்டு மறைந்துள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ரத்தன் டாடா தனது புத்திசாலித்தனத்தாலும் பணி நெறிமுறையையும் நன்றி அறியப்பட்டவர்.
சொத்து மதிப்பு
2022ல் அவரது நிகர சொத்து மதிப்பு 3800 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஐஐஎஃபெல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 421-வது இடத்தினை பிடித்திருந்தார். ரத்தன் டாடாவின் ஒரு ஆண்டு வருமான 2.5 கோடி என்று கூறப்படுகிறது.
அதற்கு முந்தைய ஆண்டு 3500 கோடியுடன் 433வது இடத்தில் இருந்து விடாமுயற்சியுடன் அடுத்த ஆண்டு முன்னேறினார். டாடா குழுமம் தனது நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாயில் 66 சதவீததை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
ஜூலை 31 2023 நிலவரப்படி டாடா முழுமம் 29 பொது வர்த்தக நிறுவனங்களை கொண்டுள்ளது. இதன் மொத்த சந்தை மூலதனமாக $300 பில்லியன்.
இவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தும் தன் எளிமையான வாழ்க்கையை காட்டினார் ரத்தன் டாடா. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்-இன் ஒரு ஆண்டு லாபம் 60,000 கோடி. சுமார் 135 நாடுகளைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இங்கு பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.