ராட்சசன் படத்தில் Item Song-ஆ.. அட பாவீங்களா, நீங்கலாம் திருந்தவே மாட்டாங்க
விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். சைக்கோ கில்லிங் திரில்லர் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.
இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். விஷ்ணு விஷாலின் ஹீரோ கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் வெளிவந்த ராட்சசன் படத்தில் படத்தோடு ஒன்றிப்போகும் விதத்தில் மட்டுமே பாடல்கள் அமைத்திருக்கும். ஆனால், ஹிந்தி ரீமேக்கில் தேவையில்லாமல் ஒரு Item song வைத்துள்ளனர்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நல்ல படத்தை இப்படி கெடுக்காதீர்கள். இப்படி இருந்த பாலிவுட் திரையுலகிற்கு ஒரு நல்ல படம் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Spoling the reputation of the original film! #Ratchasan was a class apart! This looks crass ? https://t.co/ANnhxhoTWy
— Rohit Rakshan (@ImRohit25_) August 30, 2022