என்ன குமுதா இதெல்லாம்!! படத்துக்காக புகைத்து தள்ளிய நடிகை நந்திதா!!
சினிமாவில் சில நடிகைகள் வாய்ப்பிற்காக எப்படியொரு ரோலிலும் நடிக்க தயங்கமாட்டார்கள். அப்படி கிளாமர், மது அருந்துதல், புகைப்பிடித்தல், படுக்கை காட்சி என்று நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்தவகையில் குடும்பபெண்ணாக நடிப்பை ஆரம்பித்து அடக்கவுடக்கமாக நடித்து வந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குமுதா கேரக்டரில் நடித்து பிரபலமானார்.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் என்ற படத்தில் மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகளுடனும் நடித்துள்ளார். மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள இப்படத்தில் நந்திதா புகைப்பிடித்து தள்ளியிருக்கிறார்.
