கெனிஷாவுடன் ஏற்பட்ட உறவு!! ஆர்த்திக்கு பதிலடி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி..
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கெனிஷா என்பவருடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசு எழுந்தது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார்.
இதன்பின் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என பலரும் உறுதியாகவும் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆர்த்தி, ஒரு அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்தார்.
ஜெயம் ரவி அறிக்கை
இந்நிலையில் ஆர்த்தியின் இந்த பதிவிற்கு, கெனிஷாவுடனான தொடர்புக்கும் விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ரவி மோகன். என் காயத்தை உணராமல் என்னை கேள்விக்குள்ளாக்குவதால், நான் பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன்.எனது குழந்தைகளை வைத்து பொதுவான சித்தரிப்பு மூலம், நிதி ஆதாயம் அடைய முயற்சி. எனது குழந்தைகளை பார்க்க முடியாமல், பவுன்சர்கள் மூலம் தடுக்க முயற்சி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கெனிஷாவுடன் ஏற்பட்ட உறவு
மேலும் கெனிஷா பற்றி, கெனிஷாவை பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரை காப்பாற்ற தேர்ந்தெடுத்த ஒரு தோழி. என்னை உடைத்து கொண்டிருந்த ஒரு வாழ்க்கையில் இருந்து விலகி செல்ல தைரியம் மட்டுமே இருந்த எனக்கு, அவர் ஒரு உயிர்நாடியாக மாறினார். எனது பயணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் கெனிஷா எனக்காக நின்றார்.
சூழ்நிலையை உணர்ந்து தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர். நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடும் அனைத்து போராட்டங்களையும் கெனிஷா நேரடியாக பார்த்தார். புளுக்காகவோ, கவனத்திற்காகவோ அல்லாமல், இரக்கத்துடன் வலிமையுடன் என்னுடன் இறக்க தீர்மானித்தார்.
நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியது கெனிஷா. மிரட்டி பணம் புரிபவர்களின் குடும்பத்துடன் துன்பப்பட்டதை என்னைவிட வேறு யாரும் அதிகமாக புரிந்துகொள்ள முடியாது. கெனிஷா உடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமே இல்லாதவாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், எனக்கு உண்மை தெரியும். ன் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியுமா என்று நீண்ட விளக்கத்தை தந்துள்ளார் ஜெயம்ரவி.



