காதலிக்காக பல கோடி செலவில் புதிய வீடு வாங்கிய ரவி மோகன்.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகர்
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கெனிஷா என்பவருடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசு எழுந்தது.
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இதன்பின் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என பலரும் உறுதியாகவும் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன்பின் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பின், தனது மகன்கள் போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் அவர் கடும் கோபத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது. மேலும் பல சினிமா பிரபலங்களும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனது Girl friend-காக மும்பையில் ரூ. 10 கோடி செலவில் புதிய வீடு வாங்கி கொடுத்துள்ளாராம் ரவி மோகன். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.