காதலி அனுஷ்காவுக்காக ரவி சாஸ்த்ரியிடம் கெஞ்சிய விராட் கோலி!! அதன்பின் என்ன நடந்துச்சு தெரியுமா?
விராட் கோலி 100
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சொர்ப்ப ரன்களில் அவுட்டாகிய விராட், இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்கள் எடுத்தார்.
14 மாதங்களுக்கு பின் இந்த சதத்தை அடித்ததை விராட் தன் மனைவி அனுஷ்காவுக்கு சமர்பித்தார். 100 அடித்தபோது அனுஷ்காவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடினார்.
ரவி சாஸ்த்ரி
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியை காண தன் காதலி அனுஷ்காவை அனுமதிக்க முடியுமா? என்று விராட் என்னிடம் கேட்டார். அப்போது போட்டியை காண வீரர்களின் மனைவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
நான் பிசிசிஐ-யிடம் கேட்டு அனுமதி பெற்றுக் கொடுத்தேன். அந்த போட்டியில் விராட் 169 ரன்கள் எடுத்தார். நேற்று கொடுத்தது போலவே அன்றும் அனுஷ்காவிற்கு ஒரு ஃபிளையிங் கிஸ் கொடுத்தார் விரார். அது இன்றும் ஐகானிக்காக இருக்கிறது. அவரின் மிகப்பெரிய ஆதரவாளர் அனுஷ்கா என்று ரவி சாஸ்த்ரி, விராட் கோலி சதம் அடித்தப்பின் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.