திருமணமாகி 100வது நாளா!! ஞாயிற்று கிழமை ஆனாபோது அவுட்டிங் தான்!! மனைவி மகாலட்சுமிக்கு இந்த குறை வைக்காத ரவீந்தர்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடைபெற்ற நாள் முதல் பல விமர்சனங்களை சந்தித்து வந்த தம்பதியினர் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும், மகாலட்சுமி சீரியல்களில் நடித்தும் வருகிறார்.

இடையில் ரவீந்தர் தன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதேசமயம் மகாலட்சுமி விளமரங்கள் செய்து சைட் பிஸ்னஸ்-சும் செய்து வருகிறார்.
இருவரும் ஞாயிற்றுக்கிழமையானால் போது இரவு அவுட்டிங் சென்று டின்னர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள். இன்றும் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு, திருமணம் செய்து கொண்ட 100வது நாளை கொண்டாடியுள்ளனர்.
கடந்த 37 வருடங்களுக்கு பின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அக்கரையோடு, சண்டை, நசைச்சுவை, சந்தோசமாக, அதிகப்படியான காதலோடு வாழ்கிறேன் அம்மு என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் ரவீந்தர்.