என் கல்யாணம் நாட்டுக்கே முக்கியம் இல்லை.. மகாலட்சுமியை திருமணம் செய்ததை சலிப்புடன் கூறிய ரவீந்தர்..

Serials Marriage Ravinder Chandrasekar
By Edward 2 மாதங்கள் முன்
Edward

Edward

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து முதல் திருமணம் விவாகரத்து செய்து சில காதல் சர்ச்சையிலும் சிக்கியவர் நடிகை மகாலட்சுமி. சமீபத்தில் ஃபேட் மேன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்களை கடந்த மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வைரல் திருமணம்

அதற்கு காரணம் குண்டாக இருக்கும் ரவீந்தரை அழகாக ஒல்லியாக இருக்கும் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதுதான். திருமணம் குறித்து பல இடங்களில் விளக்கம் அளித்து இன்னும் இணையத்தில் அவர்களின் திருமணம் பேசுபொருளாகத்தான் அமைந்து வருகிறது.

ரவீந்தருக்கும், மகாலட்சுமிக்கும் இரண்டாம் திருமணம் என்பதால் மனைவியின் குழந்தை என் குழந்தை என்று ரவீந்தர் கூறியிருந்தார்.

என் கல்யாணம் நாட்டுக்கே முக்கியம் இல்லை.. மகாலட்சுமியை திருமணம் செய்ததை சலிப்புடன் கூறிய ரவீந்தர்.. | Ravinder Chandrasekhar Says About His Marriage

கன்னித்தீவு ஹனிமூன்

இந்நிலையில் இருவரும் விமானத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்ததை கன்னித்தீவு ஹனிமூன் என்று இணையத்தில் வதந்திகளை பரப்பி இருந்தனர்.

இது குறித்து ரவீந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து என் திருமணம் நாட்டுக்கே முக்கியம் இல்லாத ஒன்று. என் திருமணத்தை வைத்து பலர் என் உருவத்தை வைத்தும் காசு பார்த்து வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நடத்திய உச்ச நட்சத்திரங்களின் திருமணத்தை ஓடிடியில் விற்றால் கூட வராத பணத்தை எங்கள் திருமணத்தை வைத்து பலர் சம்பாதித்துவிட்டார்கள். அதைவிட செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு வாழ்த்து கூறுவது தான் மகிழ்ச்சியளித்துள்ளது என்று ரவீந்தார் கூறியுள்ளார்.

Gallery