மனைவி மகாலட்சுமிக்கு டெலிவரி பாயாக மாறிய ரவீந்தர்.. திருமணம் ஆனா சில நாட்களிலேயே இப்படியா

Ravindar Chandrasekaran
By Kathick Sep 21, 2022 04:30 AM GMT
Report

ரவீந்தர் - மகாலட்சுமி

சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இருவருக்குமே இரண்டாம் திருமணம் ஆகும்.

மனைவி மகாலட்சுமிக்கு டெலிவரி பாயாக மாறிய ரவீந்தர்.. திருமணம் ஆனா சில நாட்களிலேயே இப்படியா | Ravindhar Given Food To Mahalakshmi

ஆம், மகாலக்ஷ்மி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்டது. அதேபோல் தயாரிப்பாளர் ரவீந்தரும் தனது முதல் மனைவியை விட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார். மகாலக்ஷ்மியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ரவீந்தர், அதற்க்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறார்.

டெலிவரி பாயாக மாறிய ரவீந்தர்

இந்நிலையில், தனது மனைவி நடித்திகொண்டிருக்கும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று அவருக்கு உணவு கொடுத்துள்ளார் ரவீந்தர். இதனை பதிவாகவும் அவர் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், திருமணம் ஆனா சில நாட்களிலேயே மனைவிக்கு டெலிவரி பாயாக மாறிய ரவீந்தர் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்..