ஹார்திக் பாண்டியாவால் உடைந்து போன நடாஷா... மனைவி விவாகரத்து செய்ய இதான் காரணம்..

Hardik Pandya Cricket Gossip Today Indian Cricket Team Divorce
By Edward Aug 29, 2024 02:30 AM GMT
Edward

Edward

in Cricket
Report

விவாகரத்து

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா, சில மாதங்களுக்கு முன் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்து வாழ்வதாக அறிவித்தார். இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நடாஷா தன் மகனுடன் தன்னுடைய சொந்த ஊருக்கே சென்று வசித்து வருகிறார்.

ஹார்திக் பாண்டியாவால் உடைந்து போன நடாஷா... மனைவி விவாகரத்து செய்ய இதான் காரணம்.. | Reason Behind Hardik Pandya Natasa Divorce Issues

இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் விளக்கியிருக்கிறார்.

என்ன காரணம்

அவர் கூறுகையில், ஹர்திக் பாண்டியாவின் தனிநபர் பிம்பம் தான் அவர்களின் உறவிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது. திருமணமான முதல் ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கைமுறை நடாஷாவிற்கு ஒத்துப்போகவில்லை.

ஹரிதிக் பாண்டியா எப்போதும் தனிப்பட்ட வாழ்க்கையை விட தனது இமேஜ் முக்கியம் என்று கருதி அதற்கான விஷயங்களை மட்டும் செய்ததாகவும் அவர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப நடாஷாவால் ஈடு கொடுத்து வாழ்க்கையை நடத்தமுடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

ஹார்திக் பாண்டியாவால் உடைந்து போன நடாஷா... மனைவி விவாகரத்து செய்ய இதான் காரணம்.. | Reason Behind Hardik Pandya Natasa Divorce Issues

குடும்பத்தினருடன் அதிக நேரத்தை ஹர்திக் பாண்டியாவால் செலவிட முடியாத சூழலால் இருவரிடையே பிரிவு நாளுக்குநால் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

ஒரு கட்டத்தில் சோர்வடைந்த நடாஷா கடந்த ஒரு ஆண்டுகளாக இனி பிரிந்துவிடலாம் என்ற முடிவை அப்போதே எடுத்துவிட்டாராம். ஒரு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்து தான் இந்த முடிவை இருவரும் எடுத்துள்ளார்கள் என்றும் அவர்களின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.