அனுஷ்கா ஷெட்டியின் 20 வருட சினிமா வாழ்க்கை!! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய பிரபல நடிகர்..

Anushka Shetty Genelia D'Souza Gossip Today N. T. Rama Rao Jr.
By Edward Aug 16, 2024 05:40 AM GMT
Report

20 வருட சினிமா வாழ்க்கை

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தமிழில் ரெண்டு படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த அனுஷ்கா ஷெட்டி, பாகுபலி 2 படத்திற்கு பின் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

மேலும் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத தால், கிடைக்கும் கதையில் நடித்து வருகிறார். 20 வருட சினிமா வாழ்க்கையில், Kathanar – The Wild Sorcerer என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். 41 வயதை தாண்டியிருக்கும் அனுஷ்கா ஷெட்டி இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டியின் 20 வருட சினிமா வாழ்க்கை!! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய பிரபல நடிகர்.. | Reason Behind Ntr Never Paired With Anushka Shetty

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆர் தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி மகளுடன் ஜோடி போட்டுள்ள என் டி ஆர், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்திருக்கிறார். ஆனால், நடிகை அனுஷ்கா ஷெட்டியும் ஒருமுறை கூட நடிக்கவில்லையாம் ஜூனியர் என் டி ஆர். சின்னதம்பி என்ற படத்தில் ஒரு பார்ட்டி பாடலுக்கு வெங்கடேஷ், என் டி ஆர், அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் நடனமாடியிருக்கிறார்கள்.

என் டி ஆர்

ஆனால் அனுஷ்கா ஷெட்டி - என் டி ஆர் கூட்டணி இதுவரை இணையவில்லை. இருப்பினும் இருவரின் கூட்டணியில் ஒரு படம் நடக்காமல் போயுள்ளதாம். இயக்குனர் மேஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவான சக்தி படத்திற்கு முதலில் அனுஷ்கா ஷெட்டியை கமிட் செய்திருக்கிறார்கள். அவருக்கு கதையை கூறி தேதிகளையும் பெற்றுள்ளனர். எல்லாம் சரி என்று நினைத்த பின், அனுஷ்கா ஷெட்டிக்கு பதிலாக நடிகை இலியானாவை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்துள்ளனர்.

அனுஷ்கா ஷெட்டியின் 20 வருட சினிமா வாழ்க்கை!! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய பிரபல நடிகர்.. | Reason Behind Ntr Never Paired With Anushka Shetty

இதற்கு காரணம், அருந்ததி படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அவர் அதிகளவில் சம்பளம் கேட்கிறார் என்ற வதந்தி செய்திகள் தான் காரணமாம். இதை வைத்து தான் சக்தி படத்தில் அனுஷ்கா ஷெட்டியை வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கிறார்கள்.

மேலும் அனுஷ்கா உயரம் என்பதாலும் என் டி ஆர் உயரம் கம்மியாக இருததால் இயக்குனரும் துணிந்து அவர்களை ஜோடி சேர்க்காமல் இருந்தார் என்ற பேச்சும் வெளியானது. ஆனால் சக்தி படம் வெளியாகி தயாரிப்பாளர் அஸ்வினி தத்திற்கு பெரும் நஷ்டத்தை கொடுத்ததாம்.