முகேஷ் அம்பானியின் இரட்டை குழந்தைகளின் பெயருக்கு பின்னால் இப்படியொரு வரலாறு-ஆ..
முகேஷ் அம்பானி
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவரான முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி குடும்பத்தை உருவாக்கி வைத்தனர்.
இந்நிலையில், இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானியின் பெயருக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி வணிகத்திலும், மனிதநேயத்திலும் வெற்றி பெற்றதற்காக மட்டுமில்லாமல், இஷா, ஆகாஷ், அனந்த் ஆகிய 3 குழந்தைகளுடனும், அவர்கள் பகிர்ந்து கொள்ளும் நெருங்கிய பிணைப்பிற்காகவும் அறியப்படுகிறார்கள்.
இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி இருவரும் இரட்டையர்கள். இருவரும் அக்டோபர் 1991ல் பிறந்தவர்கள். அனந்த் அம்பானி 1995ல் பிறந்தவர்.
இஷா அம்பானி - ஆகாஷ் அம்பானி
நீடா அம்பானி அளித்த பேட்டியொன்றில், அர்த்தமுள்ள பெயர்களை கண்டுபிடித்ததற்காக தன் கணவர் முகேஷ் அம்பானிக்கு முழுப்பெருமையையும் தெரிவித்தார். இரட்டையர்கள் பிறந்த நேரத்தில் நீடா அம்பானி அமெரிக்காவில் இர்நுதார். முகேஷ் அம்பானி இந்தியா திரும்பியிருந்தார். ஆனால் பிறப்புச்செய்தி கிடைத்தவுடன் அவசரமாகத் அமெரிக்கா திரும்பிச்செல்ல வேண்டியிருந்தது.
முகேஷ் அம்பானி தன் தாய் கோகிலாபென் அம்பானி மற்றும் அவரின் மருத்துவருடன் அமெரிக்கா திரும்பும் விமானத்தில் ஏறினார். விமானத்தில் பயணித்த போது விமானி, முகேஷுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்தார்கள். இச்செய்தியால் அனைவரும் மகிழ்ச்சிடைந்தனர். விமானப்பயணத்தின் போது குழந்தைகளுக்கு என்ன பெயரிடுவது என்று முகேஷ் அம்பானி யோசித்துள்ளார்.
முகேஷ் அம்பானி, தங்கள் மகளை பற்றிய செய்தியை பெற்றபோது மலைகளுக்கு மேல் பறந்து கொண்டிருந்தாராம். அந்த தருணத்தால் ஈர்க்கப்பட்டு மலைகளின் தெய்வம் என்று பொருள்படும் இஷா என்ற பெயரை மகளுக்கு வைத்தார். முகேஷ் அம்பானி வானத்தில் இருந்ததால், அவரின் மகனுக்கு ஆகாயம் என்ற பொருள்படும் ஆகாஷ் என்று பெயரிட்டாராம். இதுதான் இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானியின் பெயர் உருவான காரணம் என்று நீடா அம்பானி பேட்டியில் விவரித்துள்ளார்.