லிவிங் டு கெதர் வாழ்க்கையை முடித்து கொண்ட பிரியா பவானி.. காதல் பிரிவுக்கு மற்ற நடிகர்கள் தான் காரணமா?
செய்தி தொகுப்பாளராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் பிரியா பவானி சங்கர்.
இவர் வைபவ் நடிப்பில் 2017 -ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தடம் பதித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் கடலோரத்தில் வீடு வாங்கி அவரின் காதலர் ராஜவேலுவுடன் குடியேறினர். இந்நிலையில் பிரியா பவானி சங்கர், அவரின் காதலரை பிரேக் அப் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

காரணம்
திரைத்துறையில் நடிக்க வந்துவிட்டால் ஹீரோக்களுடன் சேர்ந்து ரொமான்ஸ் காட்சிகள் முத்த காட்சிகளில் நடிக்க வேண்டும். இதனால் திருமணத்திற்கு பின்பு பிரியா பவானி சங்கரை சினிமாவில் நடிக்க கூடாது என்று ராஜவேலு கூறினாராம்.
இதற்கு பிரியா பவானி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டு பிரேக் அப் ஆனதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
