எங்க அப்பா இறப்பிற்கு இதுதான் காரணம்!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த சிவராத்திரி அன்று இரவு பூஜையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மரணமடைந்தார்.
இச்செய்தி தமிழ் ரசிகர்களையும் சினிமாத்துறையினருக்கும் அதிர்ச்சியளித்தது. அவரது உடலுக்கு ரஜினிகாந்த் உட்பட பல நட்சத்திரங்கள் இறுதி அஞ்சலி செலுத்தியப்பின் ஏவிஎம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மயில்சாமியின் மகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து எப்படி அப்பா இறந்தார் என்ற தகவலை கூறியிருக்கிறார்.
படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டு சிவமணி அவர்களுடன் கோவிலில் இருந்தார். அதன்பின் நான் அப்பா, அம்மா வீட்டில் சாப்பிட்டோம். அப்போது நெஞ்சு அரிச்சலாக இருந்து சுடத்தண்ணி கொடுத்தேன்.
அதன்பின் 10 நிமிடம் கழித்து அப்பா என்னிடம் மூச்சுவிட கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். உடனே பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றோம். போனதும் மருத்துவர் இறந்துவிட்டார் என்று கூறினார்.

பின் உடனே ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.
அப்படி இருக்கையில் யூடியூப் சேனலில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்றும் அப்பா குடியால் இறக்கவில்லை என்றும் சாமி கும்பிடும் போது இறந்துவிட்டார் என்றும் கூறி வருகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை இது தான் நடந்தது என்று அவரது மகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.