பிரியா பவானியின் காதலுக்கு ஆப்பு வைத்தது யார் தெரியுமா? வெளிவந்த உண்மை சம்பவம்
Priya Bhavani Shankar
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை பல வருடங்களாக காதலித்து லிவிங்கில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவர்களின் காதல் முறிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. பிரியா பவானிக்கும் அவருடைய காதலர் ராஜவேலுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாம் இதனால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
