தினமும் பாலியல் ரீதியாக ஆபாச அச்சுறுத்தல்!! வேதனையில் கொந்தளித்த துரந்தர் பட நடிகை..
பாலிவுட்டில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வசூல் வேட்டையாடிய துரந்தர் படத்தில் ஷராரத் என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் தான் நடிகை ஆயிஷா கான்.

ஆயிஷா கான்
சமீபத்தில் ஆயிஷா கான் அளித்த பேட்டியொன்றில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்தும், வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாகவும் வேதனையுடன் மனம் திறந்து பேசியிருக்கிறார். இது போன்ற மிரட்டல்கள் தற்போது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
நான் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது, என் தந்தையும் அங்கு இருந்தார். அப்போது என் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தேன். பல நாட்களாக ஒரு நபர் எனக்கு வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டே இருந்தார். பிறகுதான், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலைப்பார்த்த நபர் என்று தெரிந்தது.

நான் இன்ஸ்டாகிராமில் என் உடல் தோற்றத்திற்காக தினமும் பாலியல் ரீதியாக ஆபாச அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறேன். நான் ஒரு சாதாரண டாப் அணிந்தாலும் சரி, ஸ்கர்ட் அணிந்தாலும் சரி, பலருக்கு அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.
யாரோ ஒருவர் என்னை ஆபாசமாக சித்தரிப்பார் என்பதற்காக, நான் என்ன ஆடை அணிய வேண்டும், எதைப்பதிவிட வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருப்பது ஒரு வருத்தமான சூழல். துரந்தர் பட ஷராரத் பாடலை படமாக்கும்போது எனக்கு மாதவிடாய் காலம், அந்த வலியுடன் நான் ஆடியதை வெளிப்படையாக கூறியதற்கும் என்னை மோசமாக விமர்சித்தார்கள் என்று வேதனையுடன் ஆயிஷா கான் தெரிவித்துள்ளார்.