நினைச்சதை விட மாஃபியா கும்பலுக்கு முடிவுகட்டிய உதயநிதி!! ரெட் ஜெயண்ட்க்கு வாரி கொடுக்கும் தயாரிப்பாளர்கள்..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தின் மூலம் கலைப்பயணத்தை ஆரம்பித்தது தான் ரெட் ஜெயண்ட். தயாரிப்பு நிறுவனமாக ஆரம்பித்து ஒருசில படங்களை தயாரித்து வந்த ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பை ஏற்று விநியோகஸ்தர்களாகவும் செயல்பட ஆரம்பித்தனர்.
தற்போது வெளியாகும் 10ல் 6 சதவீத படங்கள் ரெட் ஜெயண்ட்-ஆல் தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் சரியான கணக்குகளும் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கூடிய லாப நஷ்டத்தை குளறுபடியில்லாமலும் வெளியில் வெளிப்படையாக கூறுவது தான்.
முன்பெல்லாம் விநியோகம் செய்யப்படும் பணத்தில் லாப நஷ்ட கணக்கில் கணக்கிட முடியாத அளவிற்கு தமிழ் சினிமாவில் அல்லோலப்பட்ட நிலை இருந்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தாங்கள் விநியோகிக்கும் படத்தின் லாபம் மற்றும் நஷ்டத்தை மேடையிலேயே போட்டுடைத்தும் வருகிறார்.
இதனால் தான் தமிழ் சினிமாவில் இருக்கும் சில மாஃபியாக்களின் கும்பலிடம் இருந்து தமிழ் சினிமாவை மீட்டிருக்கிறது ரெட் ஜெய்ண்ட் என்று தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை கொட்டுக்கிறார்கள். இதை பிடிக்காத சில விஷமிகள் ரெட் ஜெய்ண்ட் மிரட்டி படங்களை வாங்கிகிறார்கள் என்ற தேவையில்லாத விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள்.