தாலி கட்டி குடும்பம் நடத்த கட்டாயப்படுத்தினார்!! உண்மையை உடைத்து புகாரளித்த நடிகை ரிஹானா...
ரிஹானா பேகம்
பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு 18 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து ரிஹானா பேகமும், தொழில் தொடங்குவதற்காக என்னிடம் வாங்கிய 20 லட்சம் ரூபாயை ராஜ் கண்ணன் திருப்பி தரவில்லை, எனக்கு தெரியாமலேயே என்னை திருமணம் செய்து கொண்டார் என்று பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை கூறினார்.
மாறிமாறி இருவரும் புகார்களை கூறியிருந்த நிலையில், விசாரணையை போலிசார் செய்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் ரிஹானா, தொழிலதிபர் ராஜ் கண்ணன் மீது புகார் ஒன்றினை ஆவடி கமிஷ்னர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.
குடும்பம் நடத்த கட்டாயப்படுத்தினார்!
புகாரளித்தப்பின் பேசிய ரிஹானா, ராஜ் கண்ணன் என்பவரின் பெயர் அழகர்சாமி. ஆதார் கார்ட், பான் கார்ட் முதல் அனைத்திலுமே தன் அடையாளங்களை மாற்றிக்கொண்டு, நான் மோசடி செய்ததாக சொல்கிறார். ஆசைக்காட்சி நான் அவரிடம் பணம் பறித்தேன் என்கிறார், எல்லாமே பொய், அவர்தான் எனக்கு காசு தரவேண்டும். முதல்ல அவர், தொழிலதிபரே கிடையாது, சாதாரண ஏஜெண்ட் தான். அதுவும் பெண்களை வைத்து பிசினஸ் செய்து வருகிறார். அடிக்கடி என்னை ரெஸ்ரோ பாருக்கு அழைத்துச்செல்வார்.
அதனால் தான் என்னை சிலர் முன்கூட்டியே அலர்ட் செய்தார்கள். எந்த பெண் சிக்கினாலும் அவர்களை வைத்து பிசினஸ் செய்துவிடுவார் அல்லது அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துவிடுவார். நீ ஜாக்கிரதையா இரும்மா என்று சிலர் சொல்லும் போது பணத்தை நான் அவரிடம் தரும்வரை அவரது சுயரூபம் எனக்கு தெரியாது, அவரது காரில் எப்போதும் பின்சீட்டில் அரிவாள் கத்தி இருக்கும். இது நானே என் கண்ணால் பார்த்தது. எப்படியோ நான் அவரிடம் மாட்டிக்கிட்டேன், இப்போது என் பணம் அவரிடம் இருக்கிறது, அதனால் தான் நான் முன்கூட்டியே புகாரளிக்கவில்லை.
பணத்தை வாங்கிக்கொண்டு, மறுநாளே புகார் தரலாம் என்று நினைத்தேன், ஆனால் அதுக்குள்ளயே இப்படியொரு நாடகம் நடத்திவிட்டார். எனக்கு தாலிக்கட்டியது, என்னை தவறாக பயன்படுத்தி, பணத்தை தந்திரமாக பேசி வாங்கி, இதெல்லாம் அவரிடம் இருந்ததால் தான் புகார் தர தயங்கினேன்.
எனக்கு தாலி கட்டிய மறுநாளே, என்னுடைய வீட்டுக்கு வந்து தங்கிவிட்டேன், அந்த ஆத்திரத்தில் தான் இப்படி செய்துவிட்டார், எனக்கு தெரியாமலே தாலி கட்டிவிட்டு, குடும்பம் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார், கல்யாண ஆசைக்காட்டி மோசடியை நான் செய்யவில்லை, மோசடி செய்தது அவர் தான், அதறகான ஆதாரத்தை வைத்திருக்கிறேன் என்று நடிகை ரிஹானா புகாரளித்தப்பின் தெரிவித்துள்ளார்.