திருமணத்திற்கு ரெடியான ரெஜினா கசாண்ட்ரா!! மாப்பிள்ளை இந்த பிரபலமா?

Regina Cassandra Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 03, 2024 12:36 PM GMT
Report

கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரெஜினா கசாண்ட்ரா நன்றாக அறிமுகமானது கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த பிறகுதான்.

இதைத்தொடர்ந்து இவர் சரவணன் இருக்க பயமேன், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, கசட தபற, தலைவி எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரெஜினா கசாண்ட்ரா, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார்.

திருமணத்திற்கு ரெடியான ரெஜினா கசாண்ட்ரா!! மாப்பிள்ளை இந்த பிரபலமா? | Regina Cassandra Getting Married

இந்நிலையில் ரெஜினா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. எனினும் இதுவரை ரெஜினா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.