அட்ஜஸ்ட்மென்ட் ஒரே ஒருமுறை தான் நடந்துச்சு..அதுவும் 20 வயதில்.. அனுபவத்தை கூறிய நடிகை ரெஜினா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமே,ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரெஜினா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், என் சினிமா வாழ்க்கையில் ஒரு முறை தான் அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான அனுபவத்தை சந்தித்து இருக்கிறேன்.
எனக்கு ஒருவர் அலைபேசியில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார். ஆனால் அப்போது எனக்கு புரியவில்லை. நான் சம்பளத்தை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார் என்று நினைத்தேன்.
பின்னர் தான் எனக்கு தெரியவந்தது இது வேறு வகையான அட்ஜஸ்ட்மென்ட் என்று. அந்த சமயத்தில் எனக்கு வயது 20 தான் என கூறியுள்ளார் ரெஜினா.
You May Like This Video