எல்லைமீறி அவதூறு பரப்புறாங்க...மன உளைச்சளில் பிரபல நடிகை ரேணு தேசாய்..

Gossip Today Indian Actress Actress Renu Desai
By Edward Mar 05, 2026 01:15 PM GMT
Report

ரேணு தேசாய்

தெலுங்கில் 2000ஆம் ஆண்டு வெளியான பத்ரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேணு தேசய். இப்படத்தினை தொடர்ந்து ஜானி படத்தில் நடித்த ரேணு, 2003 ஆம் ஆண்டுக்கு பின் நடிப்பில் இருந்து விலகினார்.

அதன்பின் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டார். பின் 2012ல் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது தன்னுடைய இரு குழந்தைகளுடன் வசித்து வரும் ரேணு, மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

எல்லைமீறி அவதூறு பரப்புறாங்க...மன உளைச்சளில் பிரபல நடிகை ரேணு தேசாய்.. | Renu Desai Files Cyber Crime Complaint Abusive Smo

எல்லைமீறி அவதூறு பரப்புறாங்க

இந்நிலையில் தன்னை குறிவைத்து அவதூறு பதிவுகள் வெளியிட்டு வந்த நான்கு சமூக வலைத்தள கணக்குகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் புகாரளித்துள்ளார் ரேணு தேசய். கடந்த சில நாட்களாக தன்னை குறித்ஹ்டு தகாத வார்த்தைகளால் சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும் அது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அதில் கூறியிருக்கிறார்.

பெண்கள், குழந்தைகள், விலங்குகள் பாதுகாப்பு குறித்து சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து கருத்து பகிர்ந்து வரும் நடிகை ரேணு தேசாய், அண்மையில் தெருநாய்கள் தாக்குதல் சம்பவங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

அந்த கருத்துக்களை சிலர் திரித்து பரப்பியதாகவும் அதனால் தன்மீது விமர்சனங்கள் அதிகரித்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவதூறு, தகாத பதிவுகள் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலிசாரை அணுகியிருக்கிறார் நடிகை ரேணு தேசாய்.