அந்த விசயத்தில் கமல் ஹாசனுக்கு போட்டிப்போட்ட பிரபல நடிகை!! உதவிய டான்ஸ் மாஸ்டர்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ரேவதி, சுரேஷ் சந்திரா மேனனை 27 ஆண்டுகளுக்கு பின் பிரிந்தப்பின் அவரது 43 வயதில் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இதன்பின் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ரகு மாஸ்டரிடம், கலா, பிருந்தா வேலை பார்த்தார்கள். புன்னகை மன்னன் படத்தில் பிருந்தா தான் எனக்கு கற்றுக் கொடுத்தார்.
அப்போது நடனத்தில் கமல் ஹாசனைவிடவும், அவருக்கு சமமாக டான்ஸ் ஆடனும் என்று பிருந்தாவிடம் கூறி 3 நாட்களுக்கு முன்பே ரிகர்சல் பண்ணேன்.
இதை கேள்விப்பட்டு ரேவதி ரிகர்சல் பண்றால என்று, நானும் வரேன்னு சொல்லி, 3வது நாள்லயே வந்துட்டாரு என்று கூறியிருக்கிறார் ரேவதி. இயக்குனர்கள் கூறியபோது அவர்களுக்கு குறை வைக்காமல் நடிக்க வேண்டும் என்று நிலை இருந்தது எனக்கு என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ரேவதி.