நான் கொடுத்த தோல்வி யாருக்காவது நடந்திருந்தால் காணாமல் போயிருப்பேன்! தல அஜித் - REWIND

valimai thala ajithkumar
By Edward Aug 24, 2021 06:21 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரம் என்ற அங்கீகாரத்தை தன் ரசிகர்களால் பெற்று வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது வலிமை படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கையில் விவேகம் படத்தின் 4 ஆண்டை கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது இணையத்தில் #4YrsOfValiantVIVEGAM என்ற ஹாஷ்டேக்கினை டிரெண்ட்டாக்கி அதிரவைத்து வருகிறார்கள். மேலும் அஜித் குறித்த பழைய வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பில்லா படத்தின் ஆரம்பகட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்த நடிகர் அஜித், என்னுடைய 5 ஆண்டுகளில் பெரிய கஷ்டங்கள், ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி கூறவேண்டும். நான் கொடுத்த தோல்விகள் வேரு யாருக்காவது நடந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள் என்று, ரசிகர் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் அஜித்.