தமிழ் சினிமாவில் பணக்கார ஜோடி யார் தெரியுமா? இத்தனை கோடி சொத்து இருக்கிறதா
Suriya
Jyothika
Tamil Cinema
By Karthick Raja
தமிழ் திரையுலகில் படங்களில் இணைந்து பணிபுரியும் போது காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகள் அஜித் - ஷாலினி, நயன்தாரா - விக்னேஷ் சிவன், சூர்யா - ஜோதிகா.
இதில் பணக்கார ஜோடி யார் என்பது குறித்து சில தகவல்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அஜித் - ஷாலினி, நயன்தாரா - விக்கி மற்றும் சூர்யா - ஜோதிகா ஆகிய மூன்று நட்சத்திர ஜோடிகளின் அதிகம் சொத்து உள்ளவர்கள் சூர்யா - ஜோதிகா ஜோடி தான் என கூறப்படுகிறது.

இவர்களின் சொத்து மதிப்பு ரூ. 537 கோடி. இதில், சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 206 கோடி என்றும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 331 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யா - ஜோதிகா திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுக்கு தியா எனும் ஒரு மகளும், தேவ் எனும் ஒரு மகனும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.