ரஜினிகாந்த் எப்படிப்பட்ட ஒரு நடிகர் என்பது குறித்து பேசிய நடிகை ரித்திகா சிங்.. என்ன கூறியுள்ளார் பாருங்க
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரித்திகா சிங். இவர் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ரித்திக் சிங் நடித்தும்.
அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் படத்திலேயே பட்டையை கிளப்பிய ரித்திகா, தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் வெளிவந்த கொத்தா எனும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
இதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார் ரித்திகா சிங். அதுவும் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகை ரித்திகா சிங் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்படிப்பட்ட ஒரு நபர் என்பது குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதில் "திரையுலகில் உள்ள சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும். அத்தகைய ஒரு நடிகர்தான் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும், மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும்" என ரித்திகா கூறியுள்ளார்.