கருப்பு விஜய் சாருக்கு செட்டாகாது..அதான் சூர்யாவுக்காக!! ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்..
ஆர்ஜே பாலாஜி
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பல நடித்து வெளியான படம் தான் கருப்பு. மே 15 ஆம் தேதி ரிலீஸான இப்படம் வெளியாகி இதுவரை உலகளவில் சுமார் ரூ. 275 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே 12 நாட்களில் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம்.
இந்நிலையில் படத்தினை பற்றி இயக்குநர் ஆர்ஜே பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்
அதில், முதலமைச்சர் விஜய் குறித்த கேள்விக்கு, அனைத்து துறைகளும் பெரியளவில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. அது என் எதிர்பார்ப்பு மட்டுமின்றி மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். அதற்காகத்தான் ஓட்டு போட்டு அவரை தேர்தெடுத்தார்கள். நானும் அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன், எனக்கு தனிப்பட்ட முறையில் விஜய் சாரை நன்றாக தெரியும். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் அனைவரைப்போல் நானும் அவர் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

கருப்பு படத்தின் கதை
மேலும் பேசிய ஆர்ஜே பாலாஜி, கருப்பு படத்தின் கதையை தயார் செய்து வைத்தப்பின், நான் முதலில் விஜய் சாரிடம் தான் சொன்னேன். அதன்பின் சூர்யா சாருக்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தபோது, அந்த கதையை அப்படியே சூர்யா சாருக்கு ஏற்றமாதிரி சொன்னேன். அப்படம் தான் தற்போது கருப்பு படமாக வெளியாகியுள்ளது. விஜய் சாரால், சிங்கம் பாதி ஒரு படத்தில் நடிக்கமுடியாது. இதனால் சூர்யாவிற்காக கதையை மாற்றினேன் என்று கூறியிருக்கிறார்.