வெளியில் சொல்லாத ஒரு விஷயம்!! நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட விஜே ரம்யா வீடியோ..
விஜே ரம்யா
பிரபல தொகுப்பாளினியும் நடிகையும் உடற்பயிற்சி பிரியையுமான விஜே ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

அதில், நான் இதுவரை வெளியில் சொல்லாத ஒரு விஷயம். எனக்கு மிகவும் கிரிட்டிகலான ஒரு நரம்பியல் பிரச்சனை கண்டறியப்பட்டது. நான் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அனைவருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பேன், ஆனால் என் முழு உடலையும் கட்டுப்படுத்தும் மூளையின் ஆரோக்கியத்தைப் பற்றி நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
உலக பக்கவாத தினம்
நம் மூளை ஒரு இயந்திரம் கிடையாது, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து வேலை வாங்கக்கூடிய கருவியாக மூளையை பயன்படுத்தக் கூடாது. அதற்கு போதுமான ஓய்வும் சரியான தூக்கமும் மிகவும் அவசியம். வயது குறைவாக இருக்கிறது என்பதற்காகவோ, உடலை ஜிம்மில் ஃபிட்டாக வைப்பதற்காகவோ பக்கவாதம் போன்ற நோய்கள் வராது என்று யாரும் நினைக்க வேண்டாம்.

அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தூக்கத்தை தொடர்ந்து தியாகம் செய்வது உயிருக்கே ஆபத்தாகவே முடியும். தூக்கத்தை புறம்தள்ளி தொடர்ந்து இரவுப்பகலாக இயங்கிக் கொண்டே இருப்பதை பெருமையாக நினைப்பதை தூக்கி எறியுங்கள். மூளைக்கும் உடலுக்கும் தேவையான ஓய்வை கொடுங்கள் என்று அக்டோபர் 29 ஆம் தேதி 'உலக பக்கவாத தினம்' பின்பற்றப்படுவதை முன்னிட்டு தூக்கம், மன அழுத்தத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசியுள்ளார் விஜே ரம்யா.