மீண்டும் விஜய் சினிமாவில் நடிக்கக்கூடாது!! ஆர்கே செல்வமணி இப்படி சொல்லிட்டாரே..

Vijay Thamizhaga Vetri Kazhagam Thalapathy 69
By Edward Oct 14, 2024 06:15 PM GMT
Edward

Edward

Report

தளபதி69

நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் படத்தினை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க அனிரூத் இசையமைக்கவுள்ளார்.

இதற்கிடையில் விஜய் தமிழக வெற்றிக் கழக வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல் மாநாடு 27ஆம் தேதி நடக்கவுள்ளது. விஜய்யின் அரசியல் குறித்து பிரபலங்கள், அரசியல்வாதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மீண்டும் விஜய் சினிமாவில் நடிக்கக்கூடாது!! ஆர்கே செல்வமணி இப்படி சொல்லிட்டாரே.. | Rk Selvamani Open Up About Vijays Political Entry

ஆர் கே செல்வமணி

தற்போது இயக்குநரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர் கே செல்வமணி விஜய் குறித்து பேசியிருக்கிறார்.

அவர் மேற்கொண்டுள்ள புதிய முயற்சியில் வெற்றி பெறவில்லை என்றால் மட்டுமே அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என்றும் அவரது புதிய முயற்சியில் வெற்றி பெற வேண்டும்.

நான்கைந்து முறையை விஜய்யை சந்தித்து பேசியதாகவும் அவர் மிகச்சிறந்த நடிகர் என்றும் புகழ்ந்துள்ளார். படங்களில் நடிப்பதை நிறுத்தி விலகவுள்ளது திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய இழப்புதான். அவர் சொன்ன விஷயங்களை இதுவரை 100 சதவிகிதம் காப்பாற்றியுள்ளதாகவும் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.