6 மாத ரகசிய திருமணம்! சீரியல் நடிகையை கழட்டி விட்டு குழந்தை பெற்றெடுத்த வில்லன் நடிகர்...

Child Rk suresh
By Edward Apr 25, 2021 03:29 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் ஹீரோ ஹீரோயின்களுக்கு அடுத்ததாக பெரியளவில் படங்களில் பேசப்பிபடுபவர் வில்லன் நடிகர்கள். அந்த வகையில் தமிழில் பாலா படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர் கே சுரேஷ்.

பாலாவின் தாரை தப்பட்டை மற்றும் விஷாலின் மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் தான் ஆர்கே சுரேஷ். இவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சீரியல் நடிகை திவ்யா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2020ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் மது என்பவரை ஆர்கே சுரேஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் வெறும் 15 பேர் மட்டும் தான் கலந்து கொண்டார்கள்.

அந்த திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே அந்த திருமணத்தின் பதிவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்கே சுரேஷ் குழந்தை பிறந்ததை சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

மேலும், அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டு ஏப்ரல் மாதத்தில் குழந்தையை பெற்று விட்டார்களே என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே இருவருக்கும் உறவு இருந்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக திருமணத்திற்கு முன்பே மது கருவுற்றிருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.