நடிகர் ரோபோ ஷங்கரா இது? ஒரு காலத்தில் பாடி பில்டராக இருந்துள்ளாரா?- இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் இதோ
நடிகர் ரோபோ ஷங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நிறைய நடிகர்கள் வந்துள்ளார்கள். அப்படி தொலைக்காட்சியில் பல காமெடி ஷோக்கள் செய்து மக்களிடம் பிரபலமாகி பின் படங்களில் நடிக்க தொடங்கியவர் ரோபோ ஷங்கர்.
2007ம் ஆண்டு வெளியான தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.
அதன்பிறகு அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

பாடி பில்டர் ரோபோ
விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் 5வது சீசன் வெற்றியாளர் ராஜு, ராஜு வூட்டுல பார்டி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வாரா வாரம் ஏதாவது பிரபலத்தை அழைத்து காமெடியாக நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அண்மையில் நடிகர் ரோபோ ஷங்கரின் பாடி பில்டிங் புகைப்படங்களை ஒளிபரப்பியுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட ரோபோ ஷங்கரா இது என அனைவருமே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சம்பள பிரச்சனையால் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றப்படுகிறாரா?- ரசிகர்கள் வருத்தம்