கால்ல விழுந்து கெஞ்சியும் என்ன ஹன்சிகா அங்க தடவ விடல.. கொச்சையா பேசி சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்
நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பாட்னர்.இதில் ஹன்சிகா மோத்வானி, யோகிபாபு, முனீஸ்காந்த், ரோபோ சங்கர் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற பேசிய ரோபோ ஷங்கர், ஹன்சிகா மோத்வானி அவ்ளோ அழகு. பார்ப்பதற்கு மெழுகு சிலை போன்று இருப்பார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் ஹன்சிகா காலை தடவுவது போன்று இருந்தது.
அந்த காட்சியில் நான் நடிக்க போராடி பார்த்தேன். ஆனால் கடைசி வரை ஹன்சிகா நோ சொல்லவிட்டார். அப்போது நானும் இயக்குனரும் கால்ல விழுந்து கெஞ்சினோம். கட்டவிரலையாச்சும் தடவிக்கிறேன்னு கேட்டோம். அதுக்கு கூட ஹன்சிகா நோ சொன்னார்.
ஹன்சிகா, 'ஆதி மட்டும் தான் என்னை தொட்டு நடிக்கணும். வேற யாரும் தொட கூடாது' என்று கூறினார்.
அப்போ தான் எனக்கு புரிந்தது ஹீரோ ஹீரோதான்.. காமெடியன் காமெடியன் என்று மேடையில் ரோபோ ஷங்கர் பேசியுள்ளார். தற்போது இவரின் கொச்சையான பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.