திருமணமாகி 5 மாதத்தில் கர்ப்பமான ரோபோ ஷங்கர் மகள்!! வளைகாப்பு வைத்த தொலைக்காட்சி..

Vijay Television Robo Shankar Mr And Mrs Chinnathirai Indraja Shankar
By Jai Aug 09, 2024 04:37 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ சங்கர் தன் மகள் இந்திரஜாவை நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தின் பாண்டியம்மா ரோலில் நடித்து அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டிய இந்திரஜா பாகல், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

திருமணமாகி 5 மாதத்தில் கர்ப்பமான ரோபோ ஷங்கர் மகள்!! வளைகாப்பு வைத்த தொலைக்காட்சி.. | Robo Shankar Daughter Indraja Pregnant News Viral

சர்வைவர் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரஜா 15 நாட்களில் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த மார்ச் 2024ல் கார்த்திக் என்பவரை தன் மகள் இந்திரஜாவுக்கு ரோபோ சங்கர் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்கு பின் தன் கணவர் கார்த்திக்குடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார் இந்திரஜா. இந்த வார எபிசோட் பிரமோ வீடியோவில் ஒரு நல்ல விஷயத்தினை இந்திரஜா - கார்த்திக் அறிவித்திருக்கிறார்கள்.

திருமணமாகி 5 மாதத்தில் கர்ப்பமான ரோபோ ஷங்கர் மகள்!! வளைகாப்பு வைத்த தொலைக்காட்சி.. | Robo Shankar Daughter Indraja Pregnant News Viral

அதாவது நாங்கள் இருவரும் தாய், தந்தை ஆகப்போகிறோம் என்று கூறி தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார் இந்திரஜாவின் கணவர் கார்த்திக். அதன்பின் நிகழ்ச்சிக்கு வந்த ரோபோ சங்கர் இங்கு இருப்பதிலேயே நான் தான் மிகவும் Young-ஆன தாத்தா என கூறி மகிச்சியடைந்துள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

You May Like This Video