ரோபோ சங்கர் இறப்புக்கு சில நாட்களுக்கு முன்!! உடைந்து போய் பேசிய மனைவி பிரியங்கா..
ரோபோ சங்கர்
மிமிக்ரி, டைமிங் காமெடி, பாடி பில்டிங் என்று பலதுறைகளில் பணியாற்றி தன்னை நிரூபித்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். தன்னுடைய மகள் இந்திரஜாவின் குழந்தை பிறந்த சில மாதங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரின் இறப்பிற்கு பலரும் அஞ்சலி செய்தினர். தற்போது தன் கணவர் இறப்பில் இருந்து மீண்டு வரும் மனைவி பிரியங்கா, பேட்டியொன்றில் பேசி பலரையும் உருக வைத்துள்ளார்.
அதில், என் கணவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அமைதியாக அவர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தேன், ஆனால் நான் அப்படியே அமைதியாக போகமாட்டேன் என சொல்வதை போன்று ஈகோ ராமன் திரைப்படத்தின் கடைசி 15 நிமிடங்களில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

என் கணவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார் பிரியங்கா. ரோபோ சங்கர் கடைசியாக நடித்த ஈகோ ராமன் படம் வரும் மே 29 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.