என் அம்மாவுக்கு ரோபோ சங்கர் நிலைமை தான் வந்துச்சி!! நடிகை வனிதா கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ சங்கர் சமீபகாலமாக உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
இதற்கு காரணம் ஆணழகன் போட்டியில் செய்த சில செயல்கள் உடல் எடையை குறைத்து மஞ்சள் காமாலை வந்தது.
மேலும் சில கெட்ட பழக்கங்கள் இருந்ததால் மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்து விட்டதால் உடல் எடை குறைந்தது என்று நடிகை வனிதா எடுத்த பேட்டியொன்றில் ரோபோ சங்கர் கூறியிருந்தார்.
அதிலிருந்து தற்போது மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார். அப்போது பேசிய வனிதா, என் அம்மாவுக்கும் இந்த பிரச்சனை இருந்தது.
அதுவும் என் அம்மாவுக்கு இரண்டு முறை இந்த பிரச்சனை வந்ததால் தான் அவர் உடல் நிலை ரொம்ப மோசமாகியது என்று கூறியுள்ளார்.
அதனால் இந்த பிரச்சனை வந்தவுடன் யாராக இருந்தாலும் சரி உடம்புல சின்ன பிரச்சனைன்னா கூட அதற்கு டாக்டர்கள் சொல்வதை கேட்டு பயப்படாமல் அதை செய்துவிடுங்கள் என்று வனிதா தெரிவித்துள்ளார்.