கிளாமர் ரோலில் நடித்ததை பார்த்த கணவர்!! லாஜிக்காக கேள்வி கேட்ட நடிகை ரோஜா..
நடிகை ரோஜா
தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ரோஜா, இயக்குநர் ஆர். கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் ஆந்திராவில் செட்டிலாகி அரசியலில் ஈடுபட்டு வந்தார். ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் பதவியில் வகித்து முழு அரசியலில் கவனம் செலுத்திய ரோஜா, தற்போது மீண்டும் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

அதன்படி சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் லெனின் பாண்டியன் என்ற படத்தில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளார். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், நடிகை தேவயானியுடன் இணைந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஆர் கே செல்வமணி
அதில், ஆர் கே செல்வமணி முதலில் என்னிடம் காதலை சொல்வதற்கு முன்பாக என் தந்தை, தாயிடம் ஓகே வாங்கிவிட்ட பின் தான் என்னிடம் சொன்னார்.
அவரை எனக்கு முதல் படத்திலேயே பிடித்ததால் நானும் ஒத்துக்கொண்டேன், நான் ஷூட்டிங்கிற்கெல்லாம் செல்லும்போது அவர் என்னைப்பற்றி என் பிள்ளைகளிடம் அப்படி இப்படி சொல்லாமல், உங்களுக்காகத்தான் அம்மா உழைக்கிறார் என்று சொல்வார்.

கிளாமர் ரோல்
நாங்கள் காதலித்துக் கொண்டிருக்கும்போது தெலுங்கு படத்தின் ப்ரிவ்யூ ஷோ எல்லாம் போடுவார்கள். நான் ஒருமுறை செல்வமணியை அழைத்துச்சென்றேன். ஒரு கிளாமர் பாடலில் என்னை பார்த்தப்பின் முகத்தை ஒருமாதிரி வைத்துக்கொண்டார்.
அதற்கு நானோ, உங்கள் படம் என்றால் அப்படி போஸ் கொடு, இந்த ட்ரெஸ் போடு என்று சொல்கிறீர்கள். இப்போது மட்டும் ஏன் இப்படி முகத்தை வைத்துக் கொள்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவரோ, எனக்கு ஒருமாதிரி இருக்கு, இனிமேல் என்னை அழைக்காதே என்று சொல்லிவிட்டார்.
அன்றிலிருந்து அவர் ப்ரிவ்யூ ஷோ வருவதையே நிறுத்திவிட்டார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.