நிச்சயம் வரை சென்ற காதல்! ரோஜா சீரியல் நடிகையை ஏமாற்றி வெளிநாடு சென்ற காதலன்..

serial roja televition priyanka nalkari
By Edward May 19, 2021 10:30 AM GMT
Report

தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக சீரியலை கொண்டு வருமானம் எட்டும் காலம் சென்று தற்போதைய சீரியல்கள் நட்டத்தை தான் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அளவிற்கு சீரியலில் அடிவாங்கி வருகிறது சன் தொலைக்காட்சி சீரியல்கள்.

ஆனால் ஒரே ஒரு சீரியல்தான் இன்னும் ரசிகர்களையும் இணையத்தில் பார்வையாளர்களையும்வைத்து வருகிறது ரோஜா சீரியல். பல முன்னணி சீரியல்கள் முடிந்துள்ளதை அடுத்து இந்த சீரியல் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்கடதேச சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி சீரியல் நடிகை என பெயர் எடுத்து தற்போது தமிழ் சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். இதையடுத்து சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா சில ஆண்டுகளுக்கு முன் பிரபல சீரியல் நடிகர் ராகுல் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தாராம். மேலும் 2018ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.

அதன்பிறகு மலேசியாவுக்கு ஒரு வேலை விஷயமாக சென்ற ராகுல் அங்கேயே நல்ல வசதியான பெண்ணை பார்த்து காதல் வலையில் விழுந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது உண்மையில்லை எனவும் மறுத்து வருகின்றனர். ராகுல் மலேசியா சென்ற பிறகு அவரை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார் பிரியங்கா.

ஆனால் எதற்குமே சரியான முறையில் அவர் பதிலளிக்கவில்லை என்பதால் ராகுல் தன்னை மறந்து விட்டார் என்பதை புரிந்து கொண்டு விலகி விட்டாராம் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா. இனிமேல் சீரியல் மூலம் படவாய்ப்பினை பெற வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்து நடித்து வருகிறாராம்.

GalleryGallery