சொத்து கொடுக்க முடியாது..திருமணத்தின் போது மனைவிக்கு பல ஒப்பந்தம் போட்ட ரொமாண்டோ..
உலக புகழ்பெற்ற கால்பந்து விரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னுடைய நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் லிவ்வின் வாழ்க்கையில் வாழ்ந்து 5 குழந்தைகளுக்கு பெற்றோரானார்கள். இவர்களின் திருமணத்திற்கு நீண்டகால நண்பர் மிகுவல் பைக்சாவோ, ஜார்ஜினாவின் சகோதரி இவானா ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்திட்டனர்.

மேலும், இருவரும் தங்களது குடும்பப் பெயர்களை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில் போர்ச்சுகல் சட்ட விதிகளின்படி சொத்து பிரிவினை, ஒப்பந்தத்தின் கீழ் இருவரும் திருமண பதிவை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தப்படி இருவரின் தனிப்பட்ட சொத்துக்கள், வருமானம், முதலீடுகள் முழுமையாக அவரவர் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். எதிர்காலத்தில் ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டாலும் சொத்துகள் தானாகப் பிரிக்கப்படாது.

சவுதி ப்ரோ லீக் கிளப் அணிகளான அல்-நாசர் வழங்கும் ஊதியம் பெஸ்தானா சிஆர்7 ஓட்டல் வணிகம், இதுவரை உள்ள சொத்துகள், பிற விளம்பர ஒப்பந்தங்களின் வருமானம் முழுமையாக ரொனால்டோ வசமே இருக்கும்.
ஒருவேளை விவாகரத்து செய்தால், ஜார்னிகாவிற்கு ரொனால்டோ தரப்பிலிருந்து மாதம்தோறும் சுமார் 1.10 கோடி ரூபாய் பராமறிப்புத் தொகை வழங்கப்படும், அத்துடன் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள சுமார். ரூ. 53.50 கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களாவின் முழு உரிமையும் ஜார்ஜியாவிற்கு வழங்கப்படும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.