சம்பளத்தை உயர்த்தியதால் சிக்கலில் நடிகை ருக்மிணி வசந்த்.. இப்படியொரு நிலைமையா!!

Indian Actress Actress Rukmini Vasanth
By Kathick Feb 26, 2026 03:30 AM GMT
Report

கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகர தாச்சே எல்லோ என்கிற ஒரே ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ருக்மிணி வசந்த்.

இதன்பின், காந்தாரா படத்தில் வில்லியாக நடித்து மிரட்டினார். இதில் இவருக்கு இந்திய அளவில் பிரபலம் கிடைத்தது. இதனால் பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சம்பளத்தை உயர்த்தியதால் சிக்கலில் நடிகை ருக்மிணி வசந்த்.. இப்படியொரு நிலைமையா!! | Rukmini Vasanth Increased Her Salary

இதை தொடர்ந்து தற்போது யாஷ் உடன் இணைந்து டாக்சிக் படத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. காந்தாரா ஹிட் ஆன பிறகு ருக்மிணி வசந்த் தனது சம்பளத்தை பல கோடி உயர்த்திவிட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

அதன் காரணமாகவே தற்போது பல தயாரிப்பாளர்கள் அவரை படங்களில் கமிட் செய்ய தயங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பட வாய்ப்புகள் அவருக்கு தேடி வருவது குறைந்திருக்கலாம் எனவும் திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

சம்பளத்தை உயர்த்தியதால் சிக்கலில் நடிகை ருக்மிணி வசந்த்.. இப்படியொரு நிலைமையா!! | Rukmini Vasanth Increased Her Salary