தீபிகா படுகோனுக்கு பதிலாக பிரபாஸ் உடன் ஜோடி சேரும் 28 வயது நடிகை! யார் தெரியுமா
Deepika Padukone
Prabhas
By Kathick
சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக ஸ்பிரிட் எனும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளிவந்தது.
மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதற்கு தயாரிப்பாளர் சரி என கூறியதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இப்படியிருக்க தற்போது இப்படத்திலிருந்து தீபிகா படுகோன் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனின் ஒர்க்கிங் ஸ்டைல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு பிடிக்கவில்லை என்பதால், அவரை படத்திலிருந்து ரிஜெக்ட் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தீபிகா படுகோனுக்கு பதிலாக நடிகை ருக்மிணி வசந்த் அந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறுகின்றனர்.