எங்கள் உடலை ஜூம் பண்ணுவதை நிறுத்துங்கள்!! கொந்தளித்த நடிகை ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த்
இந்திய சினிமாவில் தற்போது பாப்பராஸி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பாலிவுட் சினிமாவில் மட்டுமில்லாமல் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் ஊடுருவியுள்ளது. இசை வெளியீட்டு விழா முதல் நட்சத்திரங்களின் தனிப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்ளும் போது நடிகைகலை புகைப்படக் கலைஞர்கள் மட்டும் வீடியோகிராஃபர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களை படம் பிடிப்பது அதிகரித்துவிட்டது.

அதிலும் நடிகைகளின் உடல் பாகங்களை ஜூம் செய்தும் அநாகரீகமான கோணங்களில் படமெடுத்தும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கிவிடுவார்கள். இதுகுறித்து பல நடிகைகள் ஓபனாக பேசிய நிலையில், காந்தாரா பட நடிகையும் சென்ஷேஷனல் ஹீரோயினுமான நடிகை ருக்மிணி வசந்த், நடிகை சப்தமி கெளடா உள்ளிட்ட நடிகைகள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
உடலை ஜூம் பண்ணுவதை
அதில், திரைப்பட துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்சனையை தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது அவர்களின் வீடியோ, போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்பட்டுகிறது.

எங்களது உடல் ஜூம் செய்யப்படுகிறது. ஒருசிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் இங்கே கலைக்காகவும் சினிமாவிற்காகவும் இருக்கிறோம், வேண்டுமென்றே இப்படி பரப்பப்படும் படங்கள், வீடியோக்களை கண்டிக்கிறோம், அவை கண்ணியத்தை மீறுவதாகும்.
இதை பொறுத்துக்கொள்ளவோ முடியாது. இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும் அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இப்பிரச்சனை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம் என்று அந்த பதிவில் பகிர்ந்துள்ளனர்.