அரியவகை நோயால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டாரா சமந்தா! உண்மையில் நடந்தது இதுதான்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
மயோசிடிஸ்
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தியும் ரசிகர்களை கவரவும் கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்தும் வருகிறார். அந்தவகையில் சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா கடந்த மூன்று மாதகாலமாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கடும் கஷ்டங்களை சந்தித்து வருவதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வருவதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
அப்பல்லோ மருத்துவமனை
சில நாட்களாக சமந்தாவின் உடல் மோசமடைந்ததால் ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் உண்மையில் சமந்தா யசோதா படத்திற்கு பின் ஹைதராபாத்தில் ஓய்வெடுத்து வருவதாகவும் மயோசிட்டிஸ் ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதிலிருந்து குணமடைந்து வருவதாகவும் அவரது செய்தி தொடர்பாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.