24 வயதான லாரன்ஸ் ராகவா படநடிகை திடீர் தற்கொலை! இதுதான் காரணமா?

russia model Alexandra Djavi kanchana3
By Edward Aug 23, 2021 05:55 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பேய் படங்களை இயக்கியும் நடித்தும் பெரிய ஹிட் கொடுத்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் காஞ்சனா 3. இப்படத்தில் அவருக்கு பிளாஸ்பேக் காதலியாக நடித்தவர் அலெக்ஸாண்ட்ரா ஜாவி. ரஷ்ய மாடலிங் துறையில் இருந்து வந்த இவர் கோவாவில் வாடகை குடியிருப்பில் தங்கி வந்துள்ளார்.

2019ல் தன்னிடம் சென்னையை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என புகாரளித்திருந்தார். இந்நிலையில் கோவாவில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து விசாரித்து வருகிறார்கள் போலிசார். காதலர் தன்னைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மன அழுத்ததில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது குடும்பத்தினர் அனுமதியின் பேரில் உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. தற்கொலை என கருதப்பட்டாலும் பரிசோதனைக்கு பிறகுதான் இறுதி முடிவுக்கு வரமுடியும் என்று கூறிவருகிறார்கள்.