எனக்கு 2 திருமணம் நடந்தது, அதுக்கு விஜய் தான் சாட்சி!..ரகசியத்தை உடைத்த எஸ் ஏ சந்திரசேகர்

Vijay S. A. Chandrasekhar
By Dhiviyarajan Jul 02, 2023 10:05 AM GMT
Report

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் எஸ்.ஏ சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டோம். 

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து என்னிடம் என் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். சரி நானும் இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.