எஸ் ஏ சூர்யாவின் புது அவதாரம்!! 56 வயதில் அவர் சேர்த்த சொத்துக்கள் இத்தனை கோடியா...
வாளி, குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்ட எஸ் ஜே சூர்யா, நடிப்பின் மீது இருந்த ஆசையால் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருந்தார்.
இறைவி, ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தியன் 2 போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிகாட்டி அனைவரையும் பிரம்மிக்க வைத்து வருகிறார்.
இப்படங்களை தொடர்ந்து, ராயன், சரிபோதா சனிவாரம், இந்தியன் 3, கேம் ஜேன்சர், எல் ஐ சி, வீர தீர சூரன் போன்ற படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறர் எஸ் ஜே சூர்யா. ஒரு படத்திற்கு 7 முதல் 10 கோடி சம்பளமாக வாங்கி வரும் எஸ் ஜே சூர்யா, சொந்தமாக வீடு மற்றும் பிற சொத்துக்கள் சென்னையில் வைத்திருக்கிறார்.
பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட கார்களும் வைத்திருக்கிறார். 56 வயதான எஸ் ஜே சூர்யா தற்போது 150 கோடி வரை சொத்துக்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் 50 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கே எஸ் ஜே சூர்யா டஃப் கொடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.