தலைக்கனம் வந்துவிடும்..அவருக்கு இதெல்லாம் தேவையா? கமல் குறித்து எஸ்வி சேகர் பதில்..
கமல் ஹாசன்
நடிகர் அஜித், சமீபத்தில் தன்னை தல என்று கூப்பிடக்கூடாது, ஏகே அல்லது அஜித் என்று கூப்பிடுங்கள் என்று கூறியிருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் தன்னை கமல் என்றும் KH என்றும் அழையுங்கள் என்று உலக நாயகன் பட்டத்தை கூப்பிடவேண்டாம் என்று மறைமுகமாக கூறி அறிக்கை வெளியிட்டார். தற்போது கமல் பட்டத்தை துறந்ததை பலரும் விம்ர்சித்ததை அடுத்து எஸ் வி சேகர் சில கருத்தை கூறியிருக்கிறார்.
எஸ் வி சேகர்
அவர் கூறுகையில், அவர் முடிவு சரியானதுதான். பட்டம் இருந்தால்தான் அவர் கமல் ஹாசனா? 4 வயதில் நடிக்கும்போது அவருக்கு உலக நாயகன் பட்டம் இருந்ததா? பட்டம் என்பது தலைமேல் கனமாகவே இருக்கும்.
அதை அவர் துறக்க முடிவு செய்தது சரியான ஒன்றுதான். எனக்கும் நாடக சூப்பர் ஸ்டார் என்ற பட்டங்க்ள் கொடுத்தனர். ஆனல் எஸ்வி சேகர் என்ற பெயரே போதும் என்று அப்பவே முடிவெடுத்துவிட்டேன் என்று எஸ்வி சேகர் கூறியிருக்கிறார்.
கமலுக்கு தேவையே இல்லை
மேலும், கிரேஸி மோகன் என நான் பட்டம் வச்சிருக்கிகேன், நீ கிரேஸி சேகராக மாறிவிடுறியா என்று கேட்டார். ஆனால் அதெல்லாம் எதுக்குப்பான்னு சொல்லிட்டேன். கமல் ஹாசன் செய்த சாதனைகள் தான் காலத்துக்கும் அவர் புகழைப்பாடும்.
அவரும்
நானும் 50 ஆண்டுகால
நண்பர்கள், இந்திய
சினிமாவுக்கு முதல்
முறையாக டால்பி ஆடியோ
சிஸ்டம் கொண்டு வந்தது
அவர்தான். மேக்கப்பில் புதிய
விஷயம் என்று இங்கே
கொண்டு வந்ததும் அவர்தான்.
இந்த பட்டமெல்லாம் கமலுக்கு
தேவையே இல்லை என்று எஸ்
வி சேகர் கூறியிருக்கிறார்.